காவலர் குடியிருப்பில் அனுமதியில்லாமல் தங்கியுள்ள காவலர்கள் : பட்டியல் தயாரிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

காவலர்கள் குடியிருப்பில் அனுமதியில்லாமல் இருந்து வரும் காவலர்களின் பட்டியலை தயாரிக்க குழு அமைக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
காவலர் குடியிருப்பில் அனுமதியில்லாமல் தங்கியுள்ள காவலர்கள் : பட்டியல் தயாரிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
x
மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் தேவராஜன், காவலர் குடியிருப்பில் 2006 முதல் 2013ம் ஆண்டு வரை அனுமதியில்லாமல் வசித்ததற்காக 2 லட்சத்து 22 ஆயிரத்து 740 ரூபாய் வாடகை பாக்கி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், "தமிழகம் முழுவதும் காவலர்கள் குடியிருப்பில் ஆய்வு செய்து அனுமதியில்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியிருந்து வரும் காவலர்களின் பட்டியலை தயாரிக்க தனிக் குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்து, தே​வராஜனின் மனுவை  தள்ளுபடி செய்தார். 


Next Story

மேலும் செய்திகள்