விசாரணைக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கறிஞர் : நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த சம்பவத்தால் பரபரப்பு
தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ்
விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு வந்த பெண் மீது வழக்கறிஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அவ்வையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா , கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார். குழந்தை கணவருடன் உள்ள நிலையில், அம்பிகா தொடுத்த விவாகரத்து வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விசாரணைக்காக தனது தாய் மலருடன் வந்த அவரை, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அங்கிருந்து வெளியேறிய அம்பிகாவை, போலீசார் தடுத்து நிறுத்தி, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story