தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ல் நிறைவு

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ல் நிறைவு
x
தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த பதவிகளுக்கு ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், மனுக்கள் மீதான பரிசீலனை 9ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுக்களை திரும்ப பெறுவதற்கான இறுதி நாள் ஜூலை 11 என்றும், ஜூலை 18ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணிவரை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினமே மாலை 5 மணிக்கு  வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்