தர்மபுரி : வறட்சியிலும், பேரீச்சை விளைச்சல் அமோகம்
தர்மபுரி மாவட்டத்தில், கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அரேபிய பேரீச்சை அதிக விளைச்சலை கொடுத்திருப்பதால், விவசாயி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி நிஜாமுதீன், சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் பேரீச்சை சாகுபடி செய்து வருகிறார். பர்ரி, மாஸ்தூர், ஆலூலி, மூர் உள்பட 32 வகையான பேரீச்சை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பர்ரி என்ற திசு வளர்ப்பு செடி, கடும் வறட்சியையும் கடந்து அமோக விளைச்சலை தந்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் கிலோ ஒன்றுக்கு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை, போட்டி போட்டு வாங்கிச் செல்வதாக விவசாயி நிஜாமுதீன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். வறட்சியை தாங்கி வளரக் கூடிய பயிர் என்பதால், சில விவசாயிகள் பேரீச்சை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கம் வகையில், அரசு மானியம் வழங்க வேண்டும் என்பதே கிருஷ்ணாபுரம் விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
Next Story