சண்முகநதியை சுத்தப்படுத்தும் இந்து தமிழர் கட்சி
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து தமிழர் கட்சி சார்பில் சண்முக நதியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து தமிழர் கட்சி சார்பில் சண்முக நதியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பழனியின் புனித நதியாக சண்முகநதி விளங்குகிறது. 6 ஆறுகள் சங்கமித்து சண்முகநதியாக ஓடும் இந்த நதி, தற்போது பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனையடுத்து சண்முகநதியை சுத்தம் செய்யும் பணியில் இந்து தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர். நதியை பராமரிக்க பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்று இந்து தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
Next Story