50 கிலோ எடை புத்தக மூட்டையை சுமந்த மாணவர்கள் : தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கொடைக்கானலில், பாடப் புத்தகங்கள் அடங்கிய மூட்டையை மாணவர்களை சுமக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
50 கிலோ எடை புத்தக மூட்டையை சுமந்த மாணவர்கள் : தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
x
கொடைக்கானலில், பாடப் புத்தகங்கள் அடங்கிய மூட்டையை மாணவர்களை சுமக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்புக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, மூஞ்சிக்கல் நகராட்சி பள்ளியில் நடைபெற்றது. இதில், நாயுடுபுரத்தினை சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று, மாணவர்களையே புத்தகங்களையும், 50 கிலோவிற்கு மேல் எடை கொண்ட புத்தக மூட்டைகளையும் சுமக்க வைத்து, அவர்களது வாகனத்தில் ஏற்ற வைத்தனர்.  இளம் சிறார்களை புத்தக மூட்டைகளை சுமக்க வைத்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்