சிமி அமைப்பிற்கு தடை நீட்டிப்பு - இரண்டாவது நாளாக விசாரணை

சிமி என்றழைக்கப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தடை விவகாரம் தொடர்பாக மூன்று நாட்கள் விசாரணை குன்னுாரில் தொடங்கியது.
சிமி அமைப்பிற்கு தடை நீட்டிப்பு - இரண்டாவது நாளாக விசாரணை
x
சிமி என்றழைக்கப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தடை விவகாரம் தொடர்பாக மூன்று நாட்கள் விசாரணை குன்னுாரில் தொடங்கியது. 2001 ஆம் ஆண்டிலிருந்து , அந்த அமைப்பிற்கு  மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், 2014 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட  5 ஆண்டு தடை 2019 ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. அதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் அந்த அமைப்பு குறித்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயம் விசாரணையை நடத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடங்கிய விசாரணையில் போலீஸ் அதிகாரிகள், உளவு அமைப்பினர்  மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சாட்சியம் அளித்து வருகின்றனர். இரண்டாவது நாளாக நடந்த விசாரணையில் கர்நாடக மாநில அதிகாரிகள் கலந்து கொண்டு சாட்சியம் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்