உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஜாதி சான்றிதழ் கூட பெற முடியவில்லை - நெல்லை மக்கள்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தமுள்ள 55 வார்டுகளில் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஜாதி சான்றிதழ் கூட பெற முடியவில்லை - நெல்லை மக்கள்
x
உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தமுள்ள 55 வார்டுகளில் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் நெல்லை மக்களுக்கான அடிப்படை பணிகள் சரிவர நடக்கவில்லை என்று பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் குறைகளை யாரிடம் சொல்வது என்று கூட தெரியாமல் பரிதவித்து வருவதாக கூறும் மக்கள், ஜாதி சான்றிதழ் கூட வாங்க முடியவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் குப்பைகள் அகற்றப்படாமல், சாக்கடை கழிவுகள் பராமரிக்கப்படாமல் அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், மேயர் இல்லாததால் மனு கூட அளிக்க முடியவில்லை என்று குமுறுகின்றனர்.

இதேப்போல, அதிகாரிகளை அணுக முடியவில்லை என்றும் விபரம் கேட்டால் பதில் சொல்ல அவர்கள் மறுப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. எதை கேட்டாலும் இணையதளத்தில் பார்க்க சொல்வதாகவும் படிப்பறிவு இல்லாததால் தாங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் ஒரு கழிவு நீர் ஒடை உடைந்தால் கூட அது பற்றி முறையிட முடியாத சூழல் நிலவுவதாக வருத்தப்படும் மக்கள், சுகாதார பணியாளர்களை நியமிக்க கூட அதிகாரிகள் முன்வரவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள். தேர்தல் நடக்காததால் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட நயினார் குளம் தற்போது குப்பை மேடாக காட்சி அளிப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை பணிகள் நடைபெறுவதற்கு உள்ளாட்சி தேர்தல் நடப்பது மட்டுமே சரியான தீர்வு என்று கூறும் பொது மக்கள், உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்