கர்ப்பிணியை தாக்கிய சார்பு ஆய்வாளரை பதவி நீக்க கோரி உறவினர்கள் முற்றுகை

கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காளீஸ்வரனை சார்பு ஆய்வாளர் ஜான்சன் கைது செய்ய முயன்றபோது சித்ரா தடுத்துள்ளார்
கர்ப்பிணியை தாக்கிய சார்பு ஆய்வாளரை பதவி நீக்க கோரி உறவினர்கள் முற்றுகை
x
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் முனியாண்டிபுரத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்பவரின் மனைவி சித்ரா. கடந்த 18ஆம் தேதி அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காளீஸ்வரனை, சார்பு ஆய்வாளர் ஜான்சன் கைது செய்ய முயன்றபோது சித்ரா தடுத்துள்ளார். இதில் கோபமடைந்த சார்பு ஆய்வாளர், கர்ப்பிணியான சித்ராவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வயிற்றுவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சித்ரா சிகிச்சை பெற்று வரும் நிலையில்,காவல் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மருத்துவமனையில்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜான்சனை பணியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு 25 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்