திருச்செங்கோடு அருகே நவீன கழிவு நீர் மேலாண்மை திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு

கிராம மக்கள் தங்கள் பகுதியில் கழிவு நீர் தொட்டி அமைக்க கூடாது என வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டனர்
திருச்செங்கோடு அருகே நவீன கழிவு நீர் மேலாண்மை திட்டத்திற்கு  மக்கள் எதிர்ப்பு
x
திருச்செங்கோடு அருகே உள்ள அனிமூர் கிராமத்தில், நவீன கழிவுநீர் மேலாண்மை திட்டத்தின் கீழ்,  நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீரீல் இருந்து  மறுசுழற்சி முறையில் நீரை பிரித்தெடுத்து அதனை அங்குள்ள செடி மற்றும் மரங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது என்றும், மீதமாகும் வண்டலை உரமாக மாற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான உரக்கிடங்கு அமைக்கும் பணி தொடங்கியது. கிராம மக்கள் எதிர்ப்பு உள்ள நிலையில், அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனை அறிந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் கழிவு நீர் தொட்டி அமைக்க கூடாது என வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது, புதியதாக கழிவு நீர் தொட்டி அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்