மதுராந்தகம் அருகே குடிநீருக்காக பல மைல் அலையும் கிராம மக்கள் : அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக வேதனை

வீராணக்குண்ணம் கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் குடிநீர் பஞ்சம் நீடிப்பதால் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மதுராந்தகம் அருகே குடிநீருக்காக பல மைல் அலையும் கிராம மக்கள் : அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக வேதனை
x
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே வீராணக்குண்ணம் கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் குடிநீர் பஞ்சம் நீடிப்பதால் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை அடைந்துள்ளனர். விவசாய கிணற்றில் இருந்து வாரம் ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டாலும், அது குடிப்பதற்கும், சமைப்பதற்கும் ஏற்றதாக இல்லை என கூறப்படுகிறது.  அதன் காரணமாக குடிநீருக்கான பல மைல் அலைவதாகவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, வேலைக்குச் செல்வது என அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில், முழு சுகாதார திட்டத்தின் கீழ் கழிவறைகளை கட்ட  ஊராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்