குடியிருப்பு பகுதியில் சி.சி.டி.வி. கேமரா வைத்த இளைஞரை ஓட ஓட விரட்டிய கஞ்சா வியாபாரிகள்

மதுரையில் குடியிருப்பு பகுதியில் சி.சி.டி.வி. கேமரா வைத்தவரை ஓட ஓட விரட்டி கும்பல் ஒன்று கொல்ல முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடியிருப்பு பகுதியில் சி.சி.டி.வி. கேமரா வைத்த இளைஞரை ஓட ஓட விரட்டிய கஞ்சா வியாபாரிகள்
x
மதுரையில் குடியிருப்பு பகுதியில் சி.சி.டி.வி. கேமரா வைத்தவரை ஓட ஓட விரட்டி கும்பல் ஒன்று கொல்ல முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள கரும்பாலை வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை, திருட்டு போன்ற சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து சந்துரு என்ற இளைஞர்,  பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து குடியிருப்பு வளாகங்களை சுற்றி 14 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளார். இதனை கண்டு ஆத்திரமடைந்த கஞ்சா விற்பனையாளர்கள் சந்துருவை தாக்கியதோடு ஓட ஓட விரட்டினர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்