ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : திட்டக்குடியில் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டக்குடி வருவா​ய் வட்டாசியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : திட்டக்குடியில் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம்
x
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெலிங்டன் நீர்தேக்க பாசன சிறு, குறு விவசாயிகள் சங்கத்தினர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்கத்தினர் முன்னறிவிப்பின்றி திடீர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீப்ரியா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்