ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியான தமிழர்

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியான தமிழர்
x
தற்போது தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள ராமசுப்ரமணியன் தமிழகத்தை சேர்ந்தவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த இவர், 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, வழக்கறிஞராக பணியை துவங்கினார். 2006ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற அவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது, கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும் என்பது உள்பட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இவர் பல்வேறு கட்டுரைகள் மற்று​ம் சட்டம் நீதி குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார். கடந்த 2016 ஏப்ரலில் ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாறுதல் பெற்ற அவர், தற்போது ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை அவர் பதவியேற்கும் நிலையில் அவருக்கு அந்த மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ் விரத் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்