டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரும் வழக்கு : வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்ததுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரும் வழக்கு : வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
x
டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்ததுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 31 பதவிக்கான இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் ஆயிரத்து 550 பேர் பிரதான தேர்வுக்கு  அழைக்கப்படுவார்கள் என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டும் மனுதாரர் தேர்ச்சி பெறவில்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி,  தேர்வு எழுதிய ஒருவர் தொடர்ந்த  வழக்கில் தற்போது தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், இதனை பொது நல வழக்காக கருதி ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்