தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது -  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
x
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15 நாட்களாக சென்னை நீங்கலாக, தமிழகத்தில் உள்ள 556 ஒருங்கிணைந்த நீர் விநியோக திட்டங்களின் நிலை குறித்து சுவாட் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, நீர் விநியோகத்தின் சாதக பாதகங்கள், அணைகளில் நீர் இருப்பு, தண்ணீர் திறப்பு முறைகளை மாற்றுவது மூலம், நீர் விநியோகத்தில் சேவையை முறைப்படுத்துவது மட்டும் நீரேற்று நிலையங்கள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு நீர் வரத்து குறித்தும் செயற்பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை நீங்கலாக தற்போது 4 கோடியே 23 லட்சம் பேருக்கு தமிழகம் முழுவதும் நாள்தோறும் ஆயிரத்து 816 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 8 மாநகராட்சிகள், 67 நகராட்சிகள், 347 டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் 48 ஆயிரத்து 948 மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இரண்டாயிரத்து 146 மில்லியன் லிட்டர் குடிநீருக்கு பதிலாக ஆயிரத்து 816 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மின்தடை, சாலை விரிவாக்கப் பணியால் பாதிக்கப்பட்ட குழாய்கள், சில இடங்களில் நீர் ஏற்றுவதில் சிக்கல் மற்றும் குடிநீர் குழாய்களில் சில இடங்களில் உடைப்பு மற்றும் கசிவு, நீர் விநியோகம் செய்வதில் சில இடங்களில் சிக்கல் உருவாக காரணம் என்பது சுவாட் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம், மின்தடை உள்ள பகுதிகளில் ஜெனரேட்டர்கள் பயன்பாடு, கசிவு மற்றும் உடைப்பை விரைந்து சீர்செய்தல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து மின் மற்றும் இயந்திர உபகரணங்கள், உதிரிபாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சிக்கனம் தொடர்பாக மக்களிடையே பல வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு 20 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை துரிதப்படுத்தும் வகையில் வாரிய நிர்வாக இயக்குநர், பஞ்சாயத்து மற்றும் நகரப் பஞ்சாயத்து உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுடனும் கோவை, மதுரை, திருச்சி மற்றும் வேலூரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்டத்துக்கு புறம்பாக தண்ணீர் எடுக்கப்படும் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போர்க்கால அடிப்படையில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைக்க அனைத்து தரப்பு மக்களையும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்