ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை
பதிவு : ஜூன் 20, 2019, 04:13 AM
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மும்முடியை சேர்ந்தவர் கொம்பாட்டி மணி. பிரபல பைனான்ஸ் அதிபரும், ரியல் எஸ்டேட் அதிபருமான இவர், கடந்த 16 ஆம் தேதி காலை 9 மணியளவில், சாம்பேரி பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டார்.இதை கண்ட அக்கம்பக்கத்தினர் தலைவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பைனான்ஸ் அதிபர் கொம்பாட்டி மணியின் தம்பி துரைராஜ் அளித்த புகாரின் பேரிலும், தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். கடத்தப்பட்ட கொம்பாட்டி மணி, பைனான்ஸ் தொழிலுடன் சேர்த்து,ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். எனவே தொழில் போட்டி அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் காலை வேளையில் நடந்த இந்த துணிகர கடத்தல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், சேலம் ஆத்தூர் அருகே மற்றொரு இளம் தொழிலதிபர் கடத்தப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஹவுசிங் போர்டு பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். பள்ளி ஒன்றின் பங்கு தார‌ர், மல்லியக்கரை பகுதியில் பெட்ரோல் பங்க் , ரியல் எஸ்டேட் என அப்பகுதியில் இளம் தொழிலதிபராக வலம் வருகிறார், சுரேஷ். இந்த நிலையில், தனது மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர தனது காரில் சென்ற சுரேஷை, மேட்டூர் தரைப்பாலம் பகுதியில் ஸ்கார்பியோ கார் ஒன்று வழி மறித்துள்ளது. காரில் இருந்து திபுதிபுவென இறங்கிய 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சுரேஷை கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், சுரேஷின் அலறல் சத்தம் கேட்டு, அருகே இருந்த மக்கள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, சுரஷை தங்கள் காரில் கடத்தி கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றது அந்த மர்ம கும்பல்.சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் கண்காணிப்பாள் ராஜூ தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுரேஷை கடத்தி சென்ற ஸ்கார்பியோ கார், சேலம் அரசு மருத்துவமனை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரை பறிமுதல் செய்துள்ள தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.கடத்தப்பட்ட இருவரும், ரியல் எஸ்டேட் அதிபர்கள் என்பதால், ரியல் எஸ்டேட் அதிபர்களை குறிவைத்து கடத்தலா என்ற கோணத்திலும் போலீசார் விசரணையை தொடர்ந்துவருகின்றனர்.பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் துணிகர கடத்தல் சம்பவங்கள்  மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. 

பிற செய்திகள்

ரயில் நிலைய மேலாளர், தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் குறைகளை கேட்க சென்ற தென்காசி எம்.பி.யை நீங்கள் யார் என்று கேட்டதால் ரயில் நிலைய அதிகாரிக்கும், எம்.பி.க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

4 views

அய்யனார் சுவாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா கோலாகலம்

மதுரை சோழவந்தான் அருகே அய்யனார் சுவாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா 15 ஆண்டுகளுக்கு பிறகு கோலகலமாக நடைபெற்றது.

7 views

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை : நாகையில் 2 பேர் கைது

நாகையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 2 பேர் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

19 views

இன்று கிராம அஞ்சல் ஊழியர் தேர்வு - 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் கிராமிய அஞ்சல் துறை ஊழியர் பணியிடங்களுக்குகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

13 views

சுகாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெங்கையா நாயுடு

சுகாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குவதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

13 views

அத்திவரதர் வைபவம் : "பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" - விஜயபாஸ்கர்

அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு, பக்தர்கள் நலனுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.