முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள உசூடு ஏரி

புதுச்சேரியின் மிகப் பெரிய ஏரியான உசூடு ஏரி 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறண்டு போய் காட்சியளிக்கிறது.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள உசூடு ஏரி
x
கடல் போல் பறந்து விரிந்துள்ள இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 540 மில்லியன் கனஅடி ஆகும். ஆனால் தற்போது உசூடு ஏரி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. சமுத்திரம் போல் காட்சியளித்த இந்த ஏரியில் தற்போது வெடிப்புகள் தெரிகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியின் சாயல் ஏரியில் தெரியத்தொடங்கியுள்ளது. இந்த ஏரி நீரை நம்பி இங்கு வரும்  வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகளின் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் ஏரி வெறிச்சோடி காணப்படுகிறது. நீர் வற்றியுள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். ஆண்டு முழுவதும் வற்றாமல் இருந்த உசூடு ஏரியை புதுச்சேரி அரசு சரியாக பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் ஏரி காய்ந்து கிடப்பதால் மீன்களும், ஆமைகளும் உயிர் இழந்து கிடக்கின்றன. ஏரியில் நீர் வறண்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த படகுப் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியின் நிலத்தடி நீர் உயர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த உசூடு ஏரி , தற்போது வறண்டு போய் உள்ளதால், பொதுமக்களும் கலக்கத்தில் உள்ளனர். ஏரி நீரை நம்பி விவசாயம் மேற்கொள்பவரின் நிலையும் கேள்வி குறியாகியுள்ளது. ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய்களை தூர்வாரி, ஏரியை முறையாக அரசு பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Next Story

மேலும் செய்திகள்