காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு முத்திரைகளை பயன்படுத்தி ரூ. 5 கோடி மோசடி : மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு கிராமமக்கள் புகார்

காங்கேயத்தில் மர்ம கும்பல் ஒன்று கிராம‌ப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நூதன முறையில் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த‌து தெரியவந்துள்ளது.
காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு முத்திரைகளை பயன்படுத்தி ரூ. 5 கோடி மோசடி : மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு கிராமமக்கள் புகார்
x
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் மோசடி கும்பல் ஒன்று மானியத்துடன் கடன் பெற்று தருவதாக கூறி, பெண்கள் மற்றும் தொழில் முனையும் இளைஞர்களிடம் 5 கோடிக்கு மேல் நூதன முறையில் மோசடி செய்துள்ளது.  அரசு முத்திரைகள் பதித்த காரில் வலம் வந்த‌தால் மக்களும் அவர்களை நம்பி 1 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை பறிகொடுத்துள்ளனர். அவர்கள் வழங்கிய காசோலையை வங்கியில் கொடுத்து பணம் கேட்ட போது தான் மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்துள்ளனர். இது குறித்து, 50-க்கும் மேற்பட்ட மக்கள், காங்கேயம் வந்த மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம், மோசடி கும்பலை சேர்ந்த மகேஷ், திலகவதி, பிரகாஷ், வெங்கடேஷ், மாலதி ஆகிய 5 பேர் மீது புகார் அளித்துள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்த‌தை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்