கொடிவேரி அணையில் இருந்து பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கொடிவேரி அணையில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது
கொடிவேரி அணையில் இருந்து பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு
x
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கொடிவேரி அணையில் தடுக்கப்பட்டு, தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பகுதிகளில் சுமார் 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கொடிவேரி அணையில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படி எடுக்கப்பட்டால் அப்பகுதிகளில்  பாசனத்துக்கு போதிய தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் கொடிவெரி அணையில் இருந்து பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள், இதற்கு என ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்