பிரச்சினைக்குரிய டாஸ்மாக் கடை மூடப்பட்டது : இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

விழுப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 1௦ மாதமாக இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதையடுத்து பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பிரச்சினைக்குரிய டாஸ்மாக் கடை மூடப்பட்டது : இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
விழுப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 1௦ மாதமாக இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதையடுத்து பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் குடியிருப்பு பகுதிகள், ஆலயங்கள் அமைந்திருக்கும் இடத்தில் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதியன்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் கடும் பிரச்சினைகளை சந்திப்பதாக கூறி, பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தினர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று போலீசார் அளித்த அறிக்கையின் படி பிரச்சினைக்குரிய டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, பொதுமக்கள் இனிப்புகளையும் வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை கொண்டாடினர். 


Next Story

மேலும் செய்திகள்