13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்பு : பட்ஜெட் மானிய கோரிக்கை - புதிய அறிவிப்புகள் பற்றி முடிவு

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்பு : பட்ஜெட் மானிய கோரிக்கை - புதிய அறிவிப்புகள் பற்றி முடிவு
x
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதம் விரைவில்  நடைபெற உள்ளது. ஒவ்வொரு துறை வாரியாக, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையொட்டி உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில், 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள், உயர்அலுவலர்கள் பங்கேற்றுள்ள ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. புதிய கல்லூரிகள், பாட திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்