நாங்கூரில் சங்க கால இரும்பு பட்டறை கண்டுபிடிப்பு

நாகை மாவட்டம், சீர்காழி அருகே, நாங்கூரில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வில் சங்ககால பொருட்கள், இரும்பு வேலை செய்யும் கொல்லர் பட்டறை ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
நாங்கூரில் சங்க கால இரும்பு பட்டறை கண்டுபிடிப்பு
x
நாகை மாவட்டம், சீர்காழி அருகே, நாங்கூரில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வில் சங்ககால பொருட்கள், இரும்பு வேலை செய்யும் கொல்லர் பட்டறை ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் கடல்சார் தொல்லியல் துறை சார்பில் கடந்த மாதம் முதல் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின்போது, கருப்பு, சிவப்பு பானைகள், இரும்பு பொருட்கள் செய்யும் கொல்லர் பட்டறைகள், இரும்பு தாதுக்கள், கல்மணிகள் ஆகியவை கிடைத்துள்ளன. இது குறித்து கூறிய தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் செல்வகுமார், தற்போது கிடைத்துள்ள பொருட்கள் மூலம், நாங்கூர் சங்க கால மனிதர்கள் வசித்த ஊராக அறிய முடிகிறது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்