அழிந்து வரும் அரிய வகை சிங்கவால் குரங்குகள்

அரிய வகை வன உயிரின பட்டியலில் இடம்பெற்றுள்ள சிங்கவால் குரங்குகளை பாதுகாக்கும் திட்டங்களை வனத்துறை செயல்படுத்த வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அழிந்து வரும் அரிய வகை சிங்கவால் குரங்குகள்
x
அரிய வகை வன உயிரின பட்டியலில் இடம்பெற்றுள்ள சிங்கவால் குரங்குகளை பாதுகாக்கும் திட்டங்களை வனத்துறை செயல்படுத்த வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிக்கு உள்பட்ட கல்லார் காட்டுப்பகுதியில் அரிய வகை சிங்கவால் குரங்குகள் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றின் முகத்தில் சிங்கம் போல் அடர்ந்த ரோமமும், வால் பகுதி சிங்கத்தின் வால் போலவும் காட்சியளிப்பதால் இவை அந்த பெயரில் அழைக்கப்படுகின்றன. பசுமையான அடர் வனப்பகுதியில் மர உச்சிகளை வாழ்விடமாக கொண்டுள்ள, அவற்றின் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக அழிவைச் சந்தித்து வருகின்றன. எனவே சிங்கவால் குரங்குகளுக்கு உகந்த சூழலை, வனத்துறை தக்க வைக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்