மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி
பதிவு : ஜூன் 19, 2019, 03:40 PM
மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில், கடந்த 4ஆம் தேதி, தமிழக அரசுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது. அதில்,இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளில், தற்போதுள்ள இடங்களில் இருந்து, 25 விழுக்காடு கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு 10 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்துவதால், ஏற்கனவே அமலில் உள்ள 69 விழுக்காட்டிற்கு எவ்வித பாதிப்பும் வராது எனவும் கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், ஏற்கனவே, முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 10 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும், அது தொடர்பான அறிவிப்பு விரைவில் முதலமைச்சர் வெளியிடுவார் என்றும் மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

133 views

பிற செய்திகள்

பழமை வாய்ந்த ஐயப்பன் சிலை கண்டெடுப்பு

தாராபுரத்தில் மிக பழமை வாய்ந்த ஐயப்பன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

30 views

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி- 3ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 289 விநாடிகளில் 150 திருக்குறளை ஒப்பித்தார்

திருவண்ணாமலை வந்தவாசியில், 150 திருக்குறளை 289 விநாடிகளில், 3 ஆம் வகுப்பு மாணவி ஒப்புவித்து, உலக சாதனை படைத்தார்.

11 views

ராஜகோபால் உடல் நாளை அடக்கம்

சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடல் திருச்செந்தூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

77 views

பி.ஏ. பட்டதாரி, ஹாக்கி வீரர் தகுதிகளுடன் திருட்டு - சிசிடிவியில் சிக்காமல் இருக்க, தனி பாணி

பி.ஏ. பட்டதாரி, ஹாக்கி வீரர், கழிவறையில் உறக்கம் என விந்தையாக வாழ்ந்து வந்த 53 வயது சுவர் கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்பான ருசிகர தகவலும், போலீசில் சிக்கியது குறித்தும் ஒரு பார்வை...

112 views

அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் பலி : அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்று, நெரிசல் மற்றும் மூச்சுத்திணறலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

18 views

ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா உள்ளதா ? - கண்டுபிடிப்பது எப்படி?

ஏ.டி.எம்.களில் ரகசிய தகவல்களை திருடும் ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய கேமரா பொருத்தி இருப்பதை கண்டறிவது குறித்து உதவி காவல் ஆணையர் ஆரோக்கிய ரவீந்திரன் செயல்முறை விளக்கமளித்துள்ளார்.

253 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.