ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்று கிடக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி

தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நேரத்தில், சேலம் சூரமங்கலத்தில் பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ளது.
ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்று கிடக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி
x
தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நேரத்தில், சேலம் சூரமங்கலத்தில் பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ளது. ஏரியில் தண்ணீர் இருந்தும் வெளியே தெரியாத அளவிற்கு ஆகாயத் தாமரைகள் அதில் நிறைந்துள்ளது. சேலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து  வெளியேறும் சாயப்பட்டறை கழிவுநீர், இந்த ஏரியில் கலந்து வருவதாக கூறப்படும் நிலையில், குப்பைகள் கொட்டப்படும் இடமாகவும் கழிவுநீர் தேங்கி நிற்கும் குட்டையாகவும் ஏரி மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இதனால் இந்த ஏரியை தூர்வாரி சாயக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்