தமிழக அரசின் கடை நிலை பணி நியமனத்திற்கான வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் : தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழக அரசின் கடை நிலை பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் கடை நிலை பணி நியமனத்திற்கான வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் : தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
தேனியை சேர்ந்த உதயகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  சேகர் என்பவரின் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற, மனுதாரரின் கோரிக்கையை, நீதிபதி சுட்டிக்காட்டினார். அதனை ரத்து செய்ய முடியாது என்றும், இது போன்ற பணி நியமனங்களில் எவ்விதமான விதிகளும் பின்பற்றப்படவில்லை என்பது தெரிய வருவதாக நீதிபதி குறிப்பிட்டார். நேர்மையற்ற முறையில்  நியமனம் பெறும் ஊழியர்களிடம் இருந்து நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். எனவே துப்புரவு பணியாளர், தோட்ட பணியாளர், கிராம உதவியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் போன்ற கடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை தமிழக அரசின் தலைமை செயலாளர் பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.இது தொடர்பாக தலைமை செயலாளர் உரிய உத்தரவு பிறப்பித்து, அதுகுறித்த அறிக்கையை ஜூலை மாதம் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்