தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் : கல்வித்துறை உத்தரவு
பதிவு : ஜூன் 18, 2019, 11:16 PM
மாற்றம் : ஜூன் 18, 2019, 11:59 PM
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை கூட்டிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மழைக்காலம் தொடங்க இருப்பதால், சென்னையில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும், இந்த வார இறுதிக்குள் தங்கள் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். மழை பெய்யும்போது, மொத்த நீரும் அதில் சேரும் வகையில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் எனவும், அதன் பயன்களை மாணவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும்  எனவும் திருவளர்செல்வி உத்தரவிட்டார்.

பிற செய்திகள்

தமிழகத்தில் தொடரும் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

173 views

பி.டி.எஸ். கலந்தாய்வு 17ஆம் தேதி முதல் தொடக்கம் : தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு கலந்தாய்வு

பி.டி.எஸ். படிப்புக்கு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி தொடங்குவதாக மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் அறிவித்துள்ளார்.

12 views

ரூ. 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை : மறுநாளே சிதைந்து போன அவலம்

திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை, மறுநாளே சிதைந்து போனதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

38 views

சொந்த செலவில் ஏரியை தூர்வாரும் இளைஞர்கள் : இளைஞர்களின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் உள்ள ஏரி ஒன்றை, தாமாக முன்வந்து இளைஞர்கள் தூர்வாரி வருவது, அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றது.

48 views

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா இடம்பெறுமா?

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ரஷ்யாவுமே காலங் காலமாக முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்த முறை நிலவை முழுமையாக ஆராய இஸ்ரோ சார்பில் களமிறக்கப்படுகிறது.

19 views

மழை வேண்டி பூமிக்கடியில் தவபூஜை : 10 அடி ஆழ குழியில் அமர்ந்து பிரார்த்தனை செய்த சாமியார்

தருமபுரியில் மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் பூமிக்கடியில் குழி தோண்டி மணி என்ற சாமியார் தவபூஜையில் ஈடுபட்டார்.

248 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.