தண்ணீர் இல்லாமல் கட்டுமான பணிகள் நிறுத்தி வைப்பு - புதிய வரைவு சட்டத்தை முழுமையாக செயல்படுத்த கோரிக்கை

தண்ணீர் இல்லாமல் நிறைய திட்ட பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக அடுக்குமாடி கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் இல்லாமல் கட்டுமான பணிகள் நிறுத்தி வைப்பு - புதிய வரைவு சட்டத்தை முழுமையாக செயல்படுத்த கோரிக்கை
x
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அடுக்குமாடி கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய அவர்கள், பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாமல் பலர் வெளியேறுவதாக தெரிவித்தனர். கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்த கட்டுமானத்திற்கான ஒருங்கிணைந்த புதிய வரைவு சட்டம் 8 மாதம் காலம் ஆகியும் தேக்க நிலையில் உள்ளதால் பெருமளவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த சட்டத்தை முழு அதிகாரத்துடன் செயல்படுத்த அரசிடம் கோரிக்கை வைத்தும் சரியான பதில் இல்லை எனவும் குற்றம் சாட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்