விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை

'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை
x
'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான, விசுவநாத சுவாமி கோவிலுக்கு, ராஜகோபுரம் கட்ட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் வட காசி, தெற்கே தென்காசி,  நடுவே சிவகாசி எனப் பெயர் வரக் காரணமாக அமைந்திருக்கும், 'சிவகாசி விசுவநாதர் -விசாலட்சியம்மன் கோவில்,' 15ஆம் நூற்றாண்டியில் கட்டப்பட்டது. காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால் 'சிவகாசி' எனப் பெயர் பெற்றது. இந்நிலையில், சிவகாசி சிவன் கோவிலுக்கு, ராஜகோபுரம் அமைக்க, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்க வேண்டும் என, சிவகாசி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2 வருடம் முன்பு ராஜ கோபுரம் அமைக்க ஆய்வு நடைபெற்றது என்பதால், ராஜ கோபுரம் அமைத்தால் சிவகாசி தொழில் வளம் பெருகும் என்ற நம்பிக்கையில், பக்தர்கள் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்