நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - நடிகர் விஷால் மனு

தென்னிந்த நடிகர் சங்க தேர்தலின் போது, வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
x
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் நடத்தக் கூடிய அலுவலரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பத்மநாபன் தேர்தலுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 

விதிமுறைப்படி, காலை 6 மணி 45 நிமிடங்களுக்கு வாக்கு பெட்டிகள் வேட்பாளர்கள் முன் பூட்டி சீல் வைக்கப்படும் என்றும், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாலை 5 மணிக்கு வாக்கு பதிவு நிறைவு பெறும் நிலையில், 4 மணி 45 நிமிடங்களுக்கு மேல் வரிசையில் இருக்கக்கூடிய வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு, அவர்கள் மட்டும்  வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்ந்து, 5 மணி பத்து நிமிடத்திற்கு வாக்குப்பெட்டிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கான அடையாள அட்டை பெறுவதற்காக நாளைக்குள் புகைப்படத்தை தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், வரும் 21ஆம் தேதி அன்று அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அடையாள அட்டை வைத்திருக்க கூடிய வேட்பாளர்கள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிக்குள் செல்ல முடியும் என்றும், பிரநிதிகள் வர வேண்டுமானால் வேட்பாளர்களிடம் அனுமதி பெற்று அடையாள அட்டையை பெற்று வரவேண்டும் என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்