பிளாஸ்டிக் விற்பனைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பிளாஸ்டிக் விற்பனைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
x
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்பதற்கும் அரசு தடை விதித்துள்ளது. இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. பிளாஸ்டிக்கை சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளாஸ்டிக் விற்பனைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 12 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்