7-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி : ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட உலக கோப்பை

கிருஷ்ணகிரியில் 27-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவங்கியது.
x
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் மா ரகங்களை காட்சிப்படுத்தவும், விவசாயிகளை ஊக்கப்படுத்தவும் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் அகில இந்திய அளவில் மாங்கனிகள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதே போல, இந்த ஆண்டும் 27-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி,  கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. இந்த மாங்கனி கண்காட்சியில் செந்தூரா,  மல்கோவா,  பீத்தர், காதார்,  நீலம், பெங்களூரா',  பங்கனப்பள்ளி என 50-க்கும் மேற்பட்ட மா ரகங்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த கண்காட்சியில் நவதானியங்களால் செய்யப்பட்ட நாடாளுமன்றம் மற்றும் ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட உலக கோப்பை ஆகியவை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அதுமட்டுமின்றி கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொழுது போகின்ற வகையில், கொலம்பஸ், டோரா - டோரா, பிரேக் டான்ஸ், கிராஸ்வீல்,   மினி குதிரை,  மேஜிக் ஷோ,  நாககன்னி போன்ற பொழுது போக்கு அம்சங்ளும் இடம் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்