வடமாநில கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு - கொலையா? தற்கொலையா? - போலீஸ் விசாரணை

ஆம்பூர் அருகே தொழிற்சாலையில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளது சக தொழிலாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநில கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு - கொலையா? தற்கொலையா? - போலீஸ் விசாரணை
x
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பந்தேரபள்ளி பேருந்து நிலையம் அருகே அரசு அனுமதியின்றி  தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மன்சூர் என்பவரது தலைமையில் கடந்த பத்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்காததால் உரிமையாளரிடம் மன்சூர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மன்சூர் இடத்தில் ஜெயினுல் என்பவரை உரிமையாளார் பணியமர்த்தி உள்ளார். இதனால் மன்சூருக்கும், ஜெயினுல்கும் தகராறு முற்றி தொழிற்சாலையில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் ஜெயினுல் புகார் அளித்தையடுத்து இருதரப்பையும் அழைத்து விசாரணை செய்யப்பட்டது. அதன் பேரில் மன்சூர் ஆட்களுக்கு சேரவேண்டிய சம்பள தொகையில் நான்கரை லட்ச ரூபாயை தொழிற்சாலை சார்பில் வழங்குவதாக ஒப்புக்கொண்டதின் பேரில் சமாதானம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று தொழிற்சாலை அருகே உள்ள மரத்தில் மன்சூர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் நடந்தது கொலையா ? அல்லது தற்கொலையா? என விசாரணை  மேற்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்