சதுரகிரி கோயிலில் முன்னுக்கு பின் முரணாக பேசிய வெளிநாட்டவரால் பரபரப்பு
பதிவு : ஜூன் 16, 2019, 06:53 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு வந்த வெளிநாட்டவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு வந்த வெளிநாட்டவர் முன்னுக்கு பின் முரணாக  பேசியதால் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று மாலை கோயிலுக்கு வந்த ஒரு வெளிநாட்டவரை செய்தியாளர்கள் படம் பிடிக்கும் போது முகத்தை மறைத்து செய்தியாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் இன்று காலை சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முண்ணுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் நியூசிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவழியை சேர்ந்த சந்திரசேகரராம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை விடுவித்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.