மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண தொகை விடுவிப்பு

மீன்பிடி தடைகால நிவாரண தொகையாக ஒரு லட்சத்து 67 ஆயிரம் குடும்பங்களுக்கு தமிழக அரசு 83.50 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
x
தமிழகத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15 ந்தேதி முதல் ஜூன் 14 ந்தேதி வரை கிழக்கு கடற்கரை பகுதியிலும் ஜூன் 1 முதல் ஜூலை 31ந்தேதி வரை மேற்கு கடற்கரை பகுதியிலும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைகாலத்தில் 13 கடலோர மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக குடும்பம் ஒன்றுக்கு தலா 5ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 67 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 83 புள்ளி 50 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்