தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம்

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.
x
டி.ஆர்.ஏ. என்ற டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி நிறுவனம், வணிக முத்திரையுடன் கூடிய பல்வேறு வகையான நுகர்வோர் பொருட்களின் மீது வாடிக்கையாளர்கள் வைத்து இருக்கும் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்து அது பற்றிய அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதன்படி, டி.ஆர்.ஏ. நிறுவனம் தனது 9-வது கள ஆய்வை 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் கடந்த மார்ச் மாதம் வரை மேற்கொண்டது. இந்தியா முழுவதும் 16 நகரங்களில் 400-க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு விவரங்களை சேகரித்துள்ளனர். 21 முதல் 50 வயது வரையிலான மாத சம்பளம் பெறுவோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்காக கேள்விகள் கேட்கப்பட்டவர்களில் ஆண்கள் 80 சதவீதம் பேர்; பெண்கள் 20 சதவீதம் பேர் ஆவார்கள். அந்த வகையில் பத்திரிகைகள் தொடர்பான ஆய்வில் இந்திய அளவில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகள் வரிசையில் 12 பத்திரிகைகள் இடம் பெற்று உள்ளன. அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய இந்த ஆய்வில் தினத்தந்திக்கு 8-வது இடம் கிடைத்து இருக்கிறது. அதே சமயம் தமிழில் தினத்தந்திக்கு முதல் இடம் கிடைத்து இருக்கிறது. 'தினத்தந்தி' தவிர வேறு எந்த தமிழ் பத்திரிகையும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்