தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தானமாகப் பெற்ற சடலத்தில் அறுவை சிகிச்சை பயிற்சி

தமிழகத்தில் முதல் முறையாக, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெற்ற உடலை வைத்து, அறுவை சிகிச்சை பயிற்சி தரப்பட்டது.
தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தானமாகப் பெற்ற சடலத்தில் அறுவை சிகிச்சை பயிற்சி
x
தமிழகத்தில் முதல் முறையாக, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெற்ற உடலை வைத்து, அறுவை சிகிச்சை பயிற்சி தரப்பட்டது. தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள எலும்பு அறுவை சிகிச்சையில் சில சிக்கலான சிகிச்சைகள் தற்போது வரை செய்யப்படவில்லை. இதனால் விபத்து காலங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வரும் நோயாளிகள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதை தடுக்கும் வகையில் சென்னையில் இருந்து 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள எலும்பு அறுவை சிகிச்சை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, தானமாக பெற்ற சடலத்தை வைத்து அறுவை சிகிச்சை பயிற்சி அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்