வட மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வட மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி,திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாக கூடும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் குறைந்தபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்