இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - கைது
பதிவு : ஜூன் 13, 2019, 04:31 PM
அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர்கள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக, போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடுத்ததால, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

இலவச கட்டாய கல்வியை வலியுறுத்தி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
 
இதேபோல், தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். அலுவலக வளாகத்திற்குள் செல்ல முயன்றதால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

104 views

பிற செய்திகள்

சார்பு ஆய்வாளரை கண்டித்த அமைச்சர்

சார்பு ஆய்வாளர் ஒருவரை அமைச்சர் கண்டித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

46 views

"தமிழகத்தில் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்" - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 views

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச் சாவடி

லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடியது.

1 views

மாணவர்களை குறிவைத்து போதை பொருள் "சப்ளை" : கடத்தல் கும்பல் சிக்கியது

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு படிக்கவரும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை கடத்தி விற்றுவந்த மாணவி உள்பட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 views

திருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

15 views

சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.