ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் அதிகரிப்பு : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதத்தை அதிகரிப்பது தொடர்பான அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் அதிகரிப்பு : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட் தொடர்பான உத்தரவை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி  கே.கே.ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்,மோட்டார் வாகன சட்ட விதி மீறல் குறித்து புகார் அளிக்க புதிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அதன் மூலம் 96 புகார் பெறப்பட்டு உள்ளளதாக தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2018-ல் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக 14 லட்சத்து 6 ஆயிரத்து 491 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், சீட் பெல்ட் அணியாததற்காக 39 லட்சத்து 2 பேருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதையும் எடுத்துரைத்தார். தற்போது உடனடி அபராதம் வசூலிக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு காவல் துறையினருக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த 2 வார அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூன் 21க்கு தள்ளி வைத்த நீதிபதிகள்,  மோட்டார் வாகன விதி மீறல்கள் தொடர்பான வழக்குகளில் அபராதம் விதிக்கும் அதிகாரத்தை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட அனைத்து  காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். உடனடி அபராதத் தொகையை அதிகரிப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒருவாரத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்