பெரும் விபத்தில் இருந்து தப்பிய வைகை விரைவு ரயில்...

மணப்பாறை ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்த வைகை விரைவு ரயில், பெரும் விபத்துக்குள்ளாக இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பெரும் விபத்தில் இருந்து தப்பிய வைகை விரைவு ரயில்...
x
மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த வைகை விரைவு ரயில், மணப்பாறை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தத போது ரயில் பெட்டியின் பின் பகுதியில் இருந்த கொக்கி அவிழ்ந்துள்ளது. இந்த கொக்கி தண்டவாளத்தை ஒட்டியிருக்கும் சாலையை கடக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துணை ரயில்வே தண்டவாளத்தை இழுத்ததில், தண்டவாளம் ஒடிந்து சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இது மட்டுமின்றி ரயில் பெட்டியின் கொக்கியும் உடைந்து விழுந்துள்ளது. இதை அறிந்த ரயில் இன்ஜின் ஓட்டுநர் சிறிது தூரத்தில் ரயிலை நிறுத்தினார். துணை தண்டவாளம் உடைக்கப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ரயில் இயக்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று உறுதிப்படுதிய பின்னர் ரயில் புறப்பட்டது. தொடர்ந்து இது குறித்து ரயில்வே துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்