அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
பதிவு : ஜூன் 12, 2019, 01:18 PM
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்பட பல விஷயங்கள் குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முக்கிய நிர்வாகிகள், ஒற்றைத் தலைமை கோரி போர்க்கொடி தூக்கிய ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் உட்கட்சி விவகாரம், மக்களவை,  சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ராஜன் செல்லப்பா கருத்துக்கு ஆதரவு தெரிவித்த குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிகிறது. அதேபோல், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்னசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேருக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்படவில்லை என சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 

பிற செய்திகள்

வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை தேவை - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்துவர வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

68 views

திருச்சி : சைக்கிளில் ஆய்வு செய்த டிஐஜி திடீர் ஆய்வால் பரபரப்பு

திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

1687 views

திடீர் உயர் மின்னழுத்தம் - மின்சாதன பொருட்கள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டக்கரை பகுதியில் திடீரென்று உயர் மின்னழுத்தம் ஏற்பட்டது.

62 views

குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் - பறிமுதல் செய்த வாகனத்தை திருப்பி கொடுக்க வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜா, ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்துள்ளார்.

22 views

கொரோனாவால் இறந்த 55 வயது நபர் : உடலை கொடுக்க ரூ.11 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை

சென்னையில், கொரோனா தொற்றால்,உயிர் இழந்தவர் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார் மருத்துவமனை, பதினோரு லட்சம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1946 views

"தமிழகம் முழுவதும் 60599 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்" - சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்து 599 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளதாகவும், இந்தியாவிலேயே அதிகப்படியான, 13 லட்சத்து 6 ஆயிரத்து 884 பரிசோதனைகள் தமிழகத்தில் நடந்துள்ளதாகவும், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.