சென்னை மாதவரத்தில் குடிபோதையில் இருப்பவர்களின் மர்ம உறுப்பை கடித்த நபருக்கு போலீசார் வலைவீச்சு
பதிவு : ஜூன் 12, 2019, 09:47 AM
சென்னை மாதவரத்தில் குடிபோதையில் இருப்பவர்களின் மர்ம உறுப்பை கடிக்கும் சைக்கோ நபரை கண்டுபிடித்து தர பொதுமக்களுக்கு போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாதவரத்தில் குடிபோதையில் இருப்பவர்களின் மர்ம உறுப்பை கடிக்கும் சைக்கோ நபரை கண்டுபிடித்து தர பொதுமக்களுக்கு போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாதவரம் மேம்பாலத்தின் கீழே குடிபோதையில் தூங்கி கொண்டிருந்த இஸ்லாம் என்பவரின் மர்ம உறுப்பை, அடையாளம் தெரியாத ஒருவர் கடித்துள்ளார்.இதனையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதேபோல்  2 நாட்களுக்கு முன்பு,  அதே பகுதியில் குடிபோதையில் தூங்கி கொண்டிருந்த நாராயணசாமி என்பவரின் மர்ம உறுப்பையும் ஒருவர் கடித்துவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிகிறது.இதனையடுத்து நாராயணசாமி அளித்த புகாரின் பேரில்,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.