திண்டுக்கல் : அச்சுறுத்திவந்த செல்போன் திருட்டு கும்பல் சிக்கியது
பதிவு : ஜூன் 11, 2019, 05:49 PM
திண்டுக்கல் மாவட்டம் ந‌த்த‌த்தை அச்சுறுத்தி வந்த செல்போன் திருட்டு கும்பல் போலீசார் வசம் சிக்கியுள்ளது.
ந‌த்த‌த்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில், ஒத்தக்கடை பாலம் அருகே குமார் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கரவாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் செல்போனை பறித்துச் சென்றுள்ளது. இது குறித்து சாணர்பட்டி போலீசாரிடம் குமார் புகார் அளித்துள்ளார். ந‌த்தம், சாணர்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து, செல்போன் திருட்டு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால், போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்த‌னர். இந்த நிலையில், ந‌த்தம் தாலுகா அலுவலகம் முன்பு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில், தலா 3 பேர் என 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்து சுமார் 30 செல்போன்களையும், பறக்கும் கேமரா ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அவர்களிடம் விசாரித்த‌தில், செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து,  அஜய், சிவா, பெரியசாமி, அருள் முருகன், ஸ்டாலின் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1158 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4547 views

பிற செய்திகள்

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி திருநங்கைகள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

8 views

தொழில்முறை கல்விக்கான புதிய வழிமுறைகள்

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், விவசாயம் ஆகிய தொழில்முறை கல்விக்கான புதிய பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

27 views

பஸ்டே கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் - தடையை மீறி கொண்டாடியதால் கைது

சென்னையில் தடை செய்யப்பட்ட பஸ்டே கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

13 views

மருத்துவர்களின் போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் எந்தவித தொய்வும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

22 views

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - நடிகர் விஷால் மனு

தென்னிந்த நடிகர் சங்க தேர்தலின் போது, வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

12 views

தேர்வு பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - உடனடியாக பணி நியமனம் செய்ய கோரிக்கை

பள்ளிக்கல்வித்துறையில் உடற்கல்வி, தையல், ஓவியம் இசை ஆகிய பிரிவுகளில் தேர்வு பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாததால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.