மாணவிகளை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டும் கும்பல்!
பதிவு : ஜூன் 10, 2019, 06:35 PM
நாமக்கல் அருகே பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தினமும் மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போது 4 பேர் கொண்ட முகமூடி கும்பல் அவர்களை மிரட்டுவதாக கூறப்படுகிறது. கத்தியை காட்டி மிரட்டி அவர்களின் சீருடைகளை கிழித்ததாகவும், பள்ளியின் சுவர் ஓரம் நின்று கொண்டு செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. பள்ளியின் அருகே போதைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவதால் இது போன்ற குற்றங்கள் நடப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்த மக்கள், உரிய நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.