"மனைவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை" - இளைஞரை கட்டி வைத்து சரமாரியாக உதைத்த கணவர்
பதிவு : ஜூன் 08, 2019, 08:15 AM
நாகர்கோவில் அருகே மனைவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த நபரை கணவர் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈசன்தங்கு பகுதியை சேர்ந்தவர் ராம்பிரபு. அவர் நாகர்கோவிலில் பெண் ஒருவர் வைத்துள்ள துணிக்கடைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாகவும் கடையின் பெயர் பலகையில் இருந்த அப்பெண்ணின் செல்போன் எண்ணை குறித்து கொண்டு போய் ராம்பிரபு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் தனது கணவர் சுப்பிரமணியத்திடம் கூறியுள்ளார். அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வேறொரு பெண் மூலம் செல்போனில் நைசாக பேசி ராம்பிரபுவை சுப்பிரமணியன் துணிக் கடைக்கு வரவழைத்து உள்ளார். செல்போன் விவகாரம் குறித்து சுப்ரமணியன் கேட்டபோது அவரை ராம்பிரபு தாக்கியுள்ளார். இதையடுத்து நண்பர்கள் உதவியுடன் ராம்பிரபுவை சுப்பிரமணியன் சரமாரியாக தாக்கினார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3337 views

பிற செய்திகள்

தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு

"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்"

1026 views

உணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்

மதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

86 views

பேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்

பேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்

38 views

பால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.

44 views

ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்

பாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.

29 views

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.