புகையிலை தீமை குறித்த விழிப்புணர்வு வீடியோ : மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்டார்...
சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம்,நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம்,நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு வீடியோவை, கோவை ஆட்சியர் இராசமணி வெளியிட்டார். கோவை ஆவாரம் பாளையத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துமனை தயாரித்துள்ள இந்த வீடியோ வெளியீட்டின் போது, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்று நோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர்.பி குகன், தலைமை மருத்துவர் கார்த்திகோஸ் ஆகியோர் உடன் இருந்தனர். பொது மக்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல், www.quitsmokingsrior.com என்ற இணையதள முகவரியில் இந்த வீடியோவை காணலாம் என, மருத்துவர் குகன் கூறினார்.
Next Story
