இடி,மின்னலுடன் ஒரு மணிநேரம் பரவலாக மழை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது.
இடி,மின்னலுடன் ஒரு மணிநேரம் பரவலாக மழை
x
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது.நேற்று காலை முதலே லேசான மேகமூட்டங்கள் சூழ்ந்து இதமான சூழ்நிலை நிலவி வந்தது.
இதனைத் தொடர்ந்து மாலையில் அடர்ந்த மேக மூட்டங்கள் சூழ்ந்து லேசான சாரல் மழை பெய்த நிலையில், இரவு 7 மணி முதல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் நகரை ஒட்டியுள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர் வீழ்ச்சி,பியர் சோழா அருவி ஆகியவற்றிலும்தண்ணீர் கொட்டியது, இம்மழை காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும்அணைகளுக்கும் நட்சத்திர ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை : நீலகிரி மாவட்டம் இத்தலார், எமரால்டு, அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது.  இதேபோன்று ஊட்டி, தொட்டபெட்டா , மைனாலா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவாறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். நேற்று பெய்த மழையால், ஊட்டியில் இதமான சீதோசன நிலை நிலவுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்