இருகால்கள் செயலிழந்தும் உயரம் ஏறி உழைக்கும் இளைஞர்...உழைப்புக்கு உதாரணமாய் விளங்கும் மாற்றுத்திறனாளி

ராசிபுரத்தில் 2 கால்கள் செயல் இழந்த பின்பும் தன்னம்பிக்கையுடன் உயரம் ஏறுதல் உள்ளிட்ட பல கடினமான பணிகளை மேற்கொண்டு உழைத்து வரும் மாற்றுதிறனாளி இளைஞர், உழைப்பின் உதாரணமாய் விளங்கி வருகிறார்.
இருகால்கள் செயலிழந்தும் உயரம் ஏறி உழைக்கும் இளைஞர்...உழைப்புக்கு உதாரணமாய் விளங்கும் மாற்றுத்திறனாளி
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அத்திபலகானூரைச் சேர்ந்த ராஜீ - செல்வி தம்பதியினரின் மகன் சந்திரசேகர். 3 வயதிலேயே ஒருவித நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு 2 கால்களும் செயலிழந்துவிட்டது. பின்னர் தனது 2 கைகளை ஊன்றிகொண்டே சென்று 10 வகுப்புவரை படித்துள்ள இவர். சிறுவயதிலேயே கம்பம் மற்றும் மரத்தில் சுறுசுறுப்பாக ஏறி விளையாடி உள்ளார். இதனையறிந்த ராசிபுரம் சவுண்ட் சிஸ்டம் தொழில் செய்யும் ஒருவர் சந்திரசேகரை அழைத்து பல்வேறு உதவிகளை செய்து தனது தொழிலையும் கற்றுகொடுத்துள்ளார். இதனையடுத்து மாற்றுதிறனாளியானாலும் சுறுசுறுப்புடன் லைட்செட் மற்றும் ரேடியோ கட்டுவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றார். மேலும் பல உயரமான கோவில் கோபுரங்களில் எவ்வித துணையுமின்றி சாதாரணமாக ஏறி  பணிசெய்யும் இவர் 4 சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்று 25 லிட்டர் மினரல் வாட்டர் கேனை ஒவ்வொரு கடைகளுக்கும் வினியோகித்து வருகிறார். ஆரோக்கியமான மனிதர்களே வேலைசெய்ய தயக்கம் காட்டும் இந்த காலத்தில் 2 கால்கள் செயலிழந்த பின்பும் தன்னம்பிக்கையுடன் போராடிவரும் சந்திரசேகருக்கு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தால் பல மாற்றுதிறனாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக அமையும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.


Next Story

மேலும் செய்திகள்